Top Local Places

The Crossway Ministries

Pictorial St, Toronto, Canada
Church/religious organization

Description

ad

<place holder> Please check out our website www.crosswayministries.ca which contains the Pastor's profile, our mission and other useful resources.  

RECENT FACEBOOK POSTS

facebook.com

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் "இது முடிந்தது" என்று சொல்லி தலையைச் சாய்த்து ஆவியை ஒப்புக்கொடுத்தவுடன் {யோவான் 19:30} பரமபிதா "அது போதும்" என்று சொல்லி தேவாலயத்தின் திரைச்சீலையை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் கிழித்து {மத்.27;51} இனிமேல் எந்த மனுஷனும் இயேசு கிறிஸ்து மூலமாய் அவரைப் பற்றும் விசுவாசத்தால் தன்னிடத்தில் துணிவாக வரமுடியும் எனறு பிரகடனப்படுத்தினார் {எபேசி. 3:12}.

facebook.com

பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட யேகோவாவே புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட இயேசு கிறிஸ்துவாகும். இந்த அறிவு இல்லாததன் நிமித்தம் இஸ்ரவேலியர்கள் இடறலடைந்து அவரை விசுவாசியாமல் போனார்கள். அதே இடறல் உலகமெங்கும் கொள்ளைநோய்போல் இன்றும் தொடர்கிறது {யோவான் 12:37-50}.

facebook.com

கிறிஸ்துவின் சிலுவையிலேயே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை மனுஷன் சந்திக்க முடியும். வேறு எந்த இடத்திலும் கிறிஸ்துவை சந்திக்க அவன் முயற்சி செய்தால் அவன் மரணத்தை சந்திக்கவேண்டியது தவிர்க்கமுடியாது. அவரை வேறொரு இடத்தில் சந்திக்க முயற்சிசெய்த அபியூவும் நாதாபும் அக்கினியினாலும் {லேவி.10:2} கோராகும் தாத்தானும் அபிராமும் உயிரோடே பாதாளத்துக்குள்ளும் {எண்.16} தள்ளப்பட்டு மரணத்தை சந்திக்கவேண்டியதாயிற்று.

facebook.com

தவறான உபதேசத்தை ஏற்றுக்கொண்டால் அசுத்த ஆவிகள் நமக்குள் உட்புகுவதற்குப் பாதைகளை நாமே ஏற்படுத்திக் கொடுக்கிறோம் {1.யோவான் 4:1}. அதுமட்டுமல்ல, புளிப்பும் உட்புகுந்து சகலத்தையும் தாறுமாறாக்கும் {கலா.5:9, மாற்கு 8:15-17}. முடிவில், சத்தியம் நிராகரிக்கப்பட்டு அதற்கு எதிராகக் கலகஞ்செய்து அழிவு உறுதிசெய்யப்படும் {11.தெசலோ. 2:11-12, மத்.7:22-23}.

facebook.com

சிலுவை, மனுஷனுக்கு 2000 வருடங்களுக்கு முன்பு சம்பவித்தது. ஆனால் தேவனுக்கு சிலுவை உலகத்தோற்றத்திற்கு முன்பு சம்பவித்தது {1பேதுரு 1:18-20}. சிலுவையிலேயே மனுஷனுக்கு விடுதலை என்பது அவன் விழுந்தவுடன் அவனுக்கு அறிவிக்கப்பட்டது {ஆதி. 3:15}.

facebook.com

நீ எங்கே இருக்கிறாய்? {ஆதி.3:8}, நீ இப்படிச் செய்தது என்ன? {ஆதி.3:13} என்ற இரு கேள்விகளுக்குள் மனுஷ குலத்தின் சகல பிரச்னைகளும் உள்ளடங்கியிருக்கிறது.

facebook.com

Romans 7 - Episode 38

Pastor's video choice for the beginning of October 2016. நியாயப்பிரமாணம் https://vimeo.com/156692891

facebook.com

தேவனுடைய வார்த்தை நிராகரிக்கப்பட்டால் இறுதியில் கிறிஸ்துவும் தன்னை மறைத்துக்கொள்ளுவார் {யோவான் 12 : 36-37}. இந்த நடவடிக்கையின் மூலம் நீதி 1:24-30 நிறைவேறுகிறது.

facebook.com

தகவல்களைவிட ஆண்டவருடைய வார்த்தைகளை நினைவுகூருதல் மிகவும் முக்கியமானதல்லவோ? {லூக்கா 24 :7-9}.

facebook.com

கிறிஸ்துவின் சிலுவையின் நிமித்தமே மகா பரிபூரணமான பரிசுத்த ஆவியானவர் பரிபூரணமற்ற பாத்திரமாகிய விசுவாசியில் வாசஞ்செய்கிறார். விசுவாசிக்கு வழிகாட்டி அவனை வழிநடத்தி, அவனுக்கு உதவிசெய்து அவனைக் கிறிஸ்துவின் சாயலில் உருமாற்றுவதே அவருடைய உயர்ந்த நோக்கமாகும்{ரோமர் 8:26-29, 11 கொரிந்.3:18}. இதனைச் செய்வதற்கு விசுவாசி கிறிஸ்துவுக்குள் அந்த விசுவாசத்தின் மூலம் {1கொரிந்.2:2} நிலைத்திருக்கவேண்டுமென்பதே தேவனுடைய எதிர்பார்ப்பாயிருக்கிறது {ரோமர் 8:2}.

facebook.com

விசுவாசிகளாகிய நமக்குச் சம்பவிக்கிற சகலதும் பரிசுத்த ஆவியானவரால் திட்டமிடப்பட்டு நம்முடைய விசுவாசத்தைச் சோதிப்பதற்காக அனுப்பப்படுகிறது {மத்.4:1}. நம்மில் வெகு சிலரே சோதனையில் சித்தியடைகிறோம். ஆயினும் அந்த விசுவாசத்தை விட்டு விலகாமலிருந்தால் இறுதியில் வெற்றி நம்முடையதே. சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவே அந்த விசுவாசமாகும் {1கொரி.2:2}. பேதுரு தோல்வியடைந்தான். ஆனால், அவன் கிறிஸ்துவைவிட்டு விலகவில்லை {லூக்கா.22:61-62}. யூதாஸ்காரியோத்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டான். அவனும் தோல்வியடைந்தான். ஆனால், அவன் கிறிஸ்துவை விட்டு விலகினானே {மத்.26:24, லூக்கா 22 : 2-4}.

facebook.com

இயேசுகிறிஸ்துவையும் அவர் சிலுவையில் நிறைவேற்றியதையும் விசுவாசித்து அந்த விசுவாசத்தில் நிலைத்திருந்தால் {I கொரிந்.2:2, யோவான் 15:4} அசுத்த ஆவிகள் நம்மை வேதனைப்படுத்தாமல், நாம் அசுத்த ஆவிகளை வேதனைப்படுத்தமுடியும் {மத்.8:29, மாற்கு 5:7, லூக்கா 8:28}.

facebook.com

Quiz

NEAR The Crossway Ministries