DjTamil
Description
TamilischeMusik&Unterhaltung
Tell your friends
RECENT FACEBOOK POSTS
facebook.comஅன்றும் ....இன்றும்....என்றும்... 04.04.2018..
31.03.2018. ஜேர்மனி.. Warendorf.. திரு.திருமதி.சிவநாதன் கெங்காதேவி தம்பதிகளின் ஜேஷ்ட புத்திரன் திருநிறைச்செல்வன். துவாரகன் அவர்களுக்கும். WUPPERTAL நகரத்தில் வசிக்கும் திரு.திருமதி. ஜெயக்குமார் நாகேஸ்வரி தம்பதிகளின் ஜேஷ்ட புத்திரி திருநிறைச்செல்வி. டோறீனா. அவர்களும் திருமணபந்தத்தில் இணைந்தநன்நாளில் இவ்விழா மிவும் சிறப்பாக நடைபெற்ரது. திருமணதம்பதியினருக்கு.. இனிய திருமணநல்வாழ்த்துக்கள். வாழ்க...வளமுடன். இவ்விழாவை சிறப்பித்து அழகாக தொகுத்து வழங்கியபோது எடுக்கபட்ட சில நிழல்படங்கள். நன்றிகள்.
04.03.2018. ஜேர்மனி எசன் நகரில் திரு.திருமதி.றூபன் தர்மகலா தம்பதிகளின்.Ruban Kavinayan Ruban Naveenayan Ruban kavinaya. செல்லபிள்ளைகளின் பிறந்தநாள் விழாவின்போது. எடுக்கபட்ட சிலநிழல்படங்கள். நன்றிகள்.
04.03.2018. ஜேர்மனி எசன் நகரில் திரு.திருமதி.றூபன் தர்மகலா தம்பதிகளின்.Ruban Kavinayan Ruban Naveenayan Ruban kavinaya. செல்லபிள்ளைகளின் பிறந்தநாள் விழாவின்போது. திரு.தூஸ்யந்தன் குரலில் அழகான பாடல். சிறிய பதிவு. நன்றிகள்.
23.12.2018. வணக்கம் ஐரோப்பா. நெஞ்சம் மறக்குமா.
14.02.2018. என் இனிய பொன்நிலாவே.... எமதன்புச் சகோதரன். திரு.திலக் அன்ரனிப்பிள்ளை அவர்களின் குரலில். நன்றிகள். மூடுபனி திரைப்படம். 1980.ஆண்டு வெளிவந்தபடம். இசைஞானி.இளையராஐா இசையில். பாடல் ஆசிரியர்.திரு.கங்கை அமரன். பாடியவர்.Dr.K.J.யேசுதாஸ் அவர்கள்... நன்றி..
05.02.2018. வணக்கம் அன்பான உறவுகளே.. எனது புதிய கைத்தொலைபேசி இலக்கம். அல்லலுற்றோரை அரவணைக்கும் டீ ஜே கரோக்கே ஒலியியல் கதம்ப நிறுவன அவைத்"தென்றல்" அறிவிப்பாளர் வல்லிபுரம் திலகேஸ்வரன்
03.02.2018. வணக்கம் அன்பான முகநூல் உறவுகளே.... திரு.திருமதி.வல்லிபுரம் யோகம்மா. ஒரு வீரத்தாயின் குரல் இன்று ஓய்ந்து ஒலித்து மறைந்தது. ஆனால் இலட்சியம் என்றுமே மாறாது........ ஒரு மகா மனுசியின் வராலாற்று சுருக்கம். ஈழகத்தின் கிழக்கு கரை , அலையும் ஆறும் கலந்து இன்று செந்நீரால் தோய்ந்து பல்லாயிரம் தியாகங்களை உள்வாங்கி சிவந்து கிடக்கும் முள்ளிவாய்க்கால் நிலம் . அதன் முழு நிலம் முல்லைத்தீவு மாவட்டம் , அங்கு நந்திக்கடலின் கழிமுகம் கடல் சேரும் இடம் வட்டுவாகல். பண்டார வன்னியனும் குருவிச்சி நாச்சியார் என்னும் கோதையொருத்தியும் அங்குதான்இருந்தார்கள் என்ற வீர் வரலாறு கொண்ட நிலம் அது , அந்த குருவிச்சி நாச்சியார் எப்படி இருந்திருப்பாள் அவள் பேத்தி அவளது நிலத்தின்தோற்றம்இவள்தான் அந்த மண்ணின் புதல்வி வன்னி பெருநிலத்தின் தாய் குருவிச்சியின் வீர மரபு இவள் . அந்த வீரம் நிறைந்த நிலத்தில் ஓர் தாயின் உதயம் பதினெட்டாம் நாள் மேழம் (சித்திரை ) 1938 தொடங்குகின்றது . மெல்ல தமிழ் வானில் எழுந்து வந்த நிலவு மகள் அவள் . மேகங்கள் மறைவில் இருந்து ஒளி பகிர்ந்த நிலவு தாய் அவள் . இலைமறை கனியாக நின்று போராளிகளின் பசி தீர்த்த புண்ணிய தாய் அவள் , புன்சிரிப்பின் புதுவடிவம் , குறும்பான பார்வை அந்தகண்களுக்குள் இருக்கும். சுருண்ட அடர்ந்த கரும் கூந்தல் இன்று பழுத்து நிறைந்த அறிவு பூப்போல் . இளமை மாறாத துடிப்பு எல்லாம் பேச்ச்சில் கலந்து கணீர் என்ற காந்த ஒலி எழுப்பும் ! இதுதான் இங்கு அமைதியாக உறங்கி கொண்டு இருக்கும் திருமதி வல்லிபுரம் யோகம்மா . இந்த நிலவு தாய், கட்டிய பாச பரிவட்டத்துள் பல போராளிகள் நின்று போயினர் . அவளின் உள்ளத்தில் எரிந்து கொண்டு இருந்த விடுதலை தீயின் அளவினை எப்படி சொல்வது . சின்ன உதாரணங்கள்தான் மிகப்பெரிய விளக்கங்கள் கொண்டு வருகின்றன . வார பத்திரிகைகளில் வரும் செய்திகளில் கருணாநிதி ராஜபக்ச போன்றவர்களின் படங்களை கண்டாலே போதும் , அவள் மனதில் கோபம் கொப்பளித்து வரும் , உடனே அந்த கொடியவர் கண்களை எல்லாம் பத்திரிக்கை ஆனாலும்அவள் விரல்கள் நோண்டி கிழித்து விடும் .அனேகமாக அவர் வாசித்த வார பத்திரிகைகளில் கருணாநிதிக்கும் ராஜபக்சவுக்கும் கண்கள் நோண்டபட்டு இருக்கும் அழிவான்கள் இவனுகளுக்கு சாவு வராதாம் என்று மனம் திட்டும் ,அவ்வளவு வரலாற்று கோபம் அவளது மனதில் . இப்ப யாரை திட்டுறீங்க என்று கேட்கும் பொழுதுதான் தெரியும் அவர் கருணாநிதியை ராஜபக்சாவை கடந்த பத்து ஆண்டுகளாக திட்டிக்கொண்டு இருப்பது .. அவள் கடந்து வந்த பாதையில் அவள் கை பிசைந்து கொடுத்த உணவை உண்ட போராளிகள் ஏராளம் . தான் கோயிலுக்கு செல்வதாக கூறிக்கொண்டு மடியிள் முறுக்கு சீடை பொறி உருண்டை என்று கட்டிக்கொண்டு போவாராம் .இந்திய இராணுவம் எல்லா இடமும் சுற்றி நிற்கும் , , பிள்ளைகள் பொடியள் பாவம் பசியில் கிடக்குங்கள் என்று தேடி அலைந்து உல் வீதிகளில் சென்று எங்கு எங்கு ஆமிக்காரன் நிக்கிறான் என்று சொல்லி அவர்களுக்கு தன்னிடம் இருக்கும் உணவை கொடுத்து வருவாராம் . வீட்டில ஒருத்தேருக்கும் தெரியாது .தெரிந்தால் பிறகு வெளியில் போக முடியாது . எப்பொழுதும் கையில் எப்போழுதும் ஒரு புத்தகம் பத்திரிக்கை நாட்டின் செய்திகளை கொண்டதாக இருக்கும் . ஓய்வாக உறங்கும் நேரம் தவிர நாட்டின் நிலைகளை அறிந்து வெடிக்கும் இதயம் அந்த பெருமாட்டிக்கு எப்பொழுதும் மண்ணினின் கவலை மாண்ட வீரர்களின் சிந்தனை . வட்டுவாகல் முதல் வாழ்க்கைப்பட்ட அளவெட்டி வரை அவளது பாதங்கள் பதிந்த இடங்கள் எல்லாம் பல வரலாறுகள் பதிவாகிய காலங்கள் நிறையவே உண்டு. நான் அவரை சந்திக்கும் காலங்கள் எல்லாம் அவரிடம் நிறைய கதைகளை கேட்டு அறிந்து கொள்வேன் . ஏறக்குறைய ஒரு களத்தின் வரலாற்று பெட்டகம் இங்கு இந்த பெட்டிக்குள் அடக்கப்பட்டு உள்ளது . யாழ் மகாநாடு படுகொலை யாழ்நூலக எரிப்பு என்று அவற்றின் கோபங்கள் ஏராளம் .அவற்றை எல்லாம் விரல் நுனி ஆண்டு குறிப்பாக சொல்லும் வல்லமை அவருக்குள் இருந்தது .மிகுந்த தெளிவு எந்த சட்டம் எப்பொழுது வந்தது எவர் எதை பேசினார் எதை பேசவில்லை என்று எல்லாவிடையங்களையும் ஆழமாக அலசுபவர் . ஆனந்த சங்கரி தனக்கு ஓரளவு துரத்து சொந்தம் என்றாலும் அவன் எல்லாம் பச்சை கள்ளன் என்று ஒரே வார்த்தையில் அந்த பேச்சுக்கு முற்று வைத்து விடுவார் . கருணாநிதியா அவனை பற்றி பேசாதீங்க என்று கோபபடுவர் , கெட்ட ராஸ்கல் என்று சொல்லிவிடுவார் . வேண்டும் என்றே நானும் பிரபாகரன் கொஞ்சம் விட்டு கொடுத்து போயிருக்கலாம் என்று சொல்லி சீண்டுவேன் ..உங்களுக்கு என்ன பைத்தியமா என்று என்னை திட்டுவார்கள் . அவ்வளவு பெரும் நம்பிக்கை தலைவர் மீது . பிரபாகரனை தான் ஒருமுறை சென்று பார்த்ததராம் . பேச வேண்டும் ஆசை இருந்ததாம் .ஆனால் சந்தர்பம் கிடைக்கவில்லை என்றார் . ஈழம் போராளிகள் பற்றிய மிகப்பெரிய நம்பிக்கை அவருக்குள் எப்பொழுதும் இருக்கும் .அவரது பிரத்தியோக பாவனை பொருள்கள் அடங்கிய பெட்டியினை இன்று அவரது மகளும் மருமகனும் பேரகுழந்தைகளும் திறந்த பொழுது அதற்குள் ஒரு புலிகொடி தேசியத்தலைவரின் படம் அன்னையர் முன்னனி பற்றிய செய்திகள் , நாட்டின் போராட்டாம் பற்றிய தகவல்கள், திலிபனின் உண்ணாவிரதம் கிட்டு , சீலன் ,சத்தியநாதன் மாலதி ,அன்னை பூபதி, என்று போராட்டம் பற்றிய குறிப்புகள் எல்லாமே ஈழத்தின் விடுதலை தொடர்பான விடையங்கள் ஏராளம் இருந்தன . தான் சிறுமியாக இருந்த காலம் என்று தொடங்கி இந்திய வல்லாதிக்க படை எடுப்பு தாண்டி யாழ் இடப்பெயர்வு வரை அவரிடம் இருந்து நான் உள்வாங்கி கொண்ட விடையங்கள் ஏராளம் . அவருக்கு அப்பொழுது எழு எட்டு வயதுதான் இருக்கும் என்று தொடங்குவார் . அன்று ஆங்கிலேயர்கள் ஆட்சி காலம் அது .அங்காங்கே சில புரட்சி நடந்து கொண்டு இருத்து .அப்பொழுது ஆங்கிலேயர்கள் ஆபிரிக்க கருப்பு இனத்தவர்களை சங்கிலிகளில் பிணைத்து கொண்டு வருவார்கள் ,அவர்களை காட்டி இவர்கள் உங்களை கடித்து சாப்பிட்டு விடுவார்கள் அதனால்தான் இப்படி கட்டி வைத்து உள்ளோம் என்பார்கள் .அவர்களை அவிழ்த்து விட்டால் நீங்கள் எல்லோரும் கொல்லப்பட்டு விடுவீர்கள் என்று பயம் காட்டி தங்களை பயப்படுத்தி வைத்து இருந்தார்கள் . சில நாட்களில் சிலகறுப்பு இனத்தவர்கள் தப்பி விட்டார்கள் என்றதும் அவர்களை தேடும் பணிகள் ஆரம்பம் ஆகும் . அவ்வாறு தப்பியவர்களை தேடும் பொழுது நாங்கள் எல்லோரும் பயத்தில் வீடுகளுக்குள் இருந்து வெளியில் கூட செல்ல பயந்து கிடப்போம் , கருப்பர்கள் வந்து தங்களை கடித்து திண்டு விடுவார்கள் என்று ஒரு பயம் . ஒரு இனத்தை அடக்க இன்னும் ஒரு அடிமை இனத்தை வெள்ளையர்கள் எப்படி பயன்படுத்தி வருகின்றார்கள் என்று பின்புதான் தாங்கள் அறிந்ததாக அவர் சொல்வார் .அன்றில் இருந்துதான் அவருக்கு ஒரு செயலுக்குள் இருக்கும் இன்னும் ஒரு சதி பற்றிய ஆய்வு தொடங்கியது . ஒருவன் ஒரு விடையத்தை சொன்னால் அதற்குள் அவர் இன்னும் ஒரு செய்தியை சேர்த்து சொல்கின்றான் என்று மிகபெரிய விடையத்தை எனக்கு கற்பித்த ஆசான் இந்த எளிமையான வரலாற்று ஆசிரியை . பின்னால் இது இவ்வாருதான் நடக்கும் என்று தனது அனுபவ முறையில் சொல்லும் வல்லமை அவருக்குள் இருந்தது அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார் அஃது அறி கல்லாதவர் என்பது குறள் நாட்டில் பேச்சுவர்த்தை தொடங்குகின்றது என்று எல்லோரும் பேசிய நாட்களில் அவர் எனக்கு சொன்ன விடையம் . வெள்ளகாரங்கள் சரியான பொய்யனுகள் என்று . அவரின் மனதில் பசுமரத்து ஆணிபோல் அந்த கருத்து அழமாக தைத்து இருந்தது . அன்று புரிந்த விடையம் இறுதிவரை அவருக்குள் இருந்தது .. எரிக் சொல்கைம் பச்ச கள்ளன் என்று தனக்கே உரிய பாணியில் அவர் சொல்லும் பொழுது முதிர்ந்த அரசியல் அனுபவம் அவருக்குள் இருந்தது . முல்லைதீவில் இருந்து கொண்டே நோர்வே வரை அவரது சிந்தனைகள் சென்று இருந்தது , அவன் அமெரிக்காவின் ஆள் என்று சொல்லும்பொழுது அவருக்குள் எவ்வளது தெளிவாக அரசியல் நுழைந்து உள்ளது என்று நான் பிரமித்து இருந்தேன் . இந்த பங்கின் மூன் கோபி அண்ணான் எல்லா கள்ளனுகள் , அவனுகளுக்கு எல்லாம் தெரியும் . இந்தியாகாரன் அவனுகளுக்கு சொல்லி வச்சு இருக்கான் . தமிழனுக்கு ஒன்றும் செய்ய கூடாது என்று . இந்த பேச்ச்சு வார்த்தை எல்லாம் சரிவராது . என்று தீர்கமாக சொல்லும் அவரது முன்னனுபவம் மிகவும் பெரியது . . நான் அவருடன் அடிக்கடி பேசும்பொழுது வயது வித்தியாசம் இருப்பது தெரியாது என்னுடன் கூட பழகும் ஒரு சக வயது தோழியுடன் பேசுவதுபோலவே நான் அவருடன் பேசுவேன் , இவரை ஒத்த வயது உடையவ்ர்களுக்குள் இந்த தெளிவு இருப்பதை இவரை தவிர நான் வேறு எவரிடமும் கண்டதில்லை என் அனுபவத்தில் . சிலரே அதை சொல்லும் தைரியம் கொண்டவர்கள் . பலர் பேசவே பயபடுவார்கள் ,இவரிடம் அதை பார்க்க முடியாது . கோபம் வரும் பொழுது வார்த்தை அனலாகும் . மிகுந்த உரமான இரும்பு பெண்மணி .. அகமும் புறமுமே தமிழன் வாழ்வு ஆக , இடையில் கிண்டலாக அவரிடம் உங்கள் இளமைகால காதல் கதைகள் ஏதாவது சொல்லுங்களேன்..நீங்கள் காதலித்த கதை அல்லது உங்கள் அயலவர் காதல் கதை ஏதாவது என்று கேட்கும் பொழுது .அந்த கண்கள் அகல விரிந்து இதழ் குவிந்து நாணம் தழுவி நரம்புகள் முகத்தில் சிவக்க வைக்கும் அந்த அழகு பார்வை இன்னும் இந்த கண்களுக்குள் நிற்கின்றது . இப்ப இவருக்கு இதுதான் முக்கியம் என்று ஒரு கோபம் வரும் . கண்டதும் முதலில் கேட்பது சாபிட்டீன்களா என்றுதான் .இது களம் முதல் கனடாவரை அவரது முதல் சம்பாசனையாக இருந்து வந்தது . சில் மனிதர்கள் மட்டுமே இவ்வாறு பிறக்கின்றார்கள் . எல்லா போராட்டத்துக்கும் செல்லவேண்டும் என்ற ஏக்கம் அவருக்குள் . கோயில் சென்று வழிபடுவதும் போராட்டங்களுக்கு செல்வதும் அவருக்கு இரண்டு கண் . முதலில் நான் அவரை கண்டது வட்டுவாகளில் , ஏறக்குறைய முப்பத்தி ஐந்து வருடங்கள் அவரை எனக்கு தெரியும் . ஒரு குடும்ப உறவினனாக அவர் என்னை கணித்ததை விட ஒரு தமிழ் பற்று கொண்ட மனிதனாக என்னை மதிப்பீடு செய்து பேசுவதுதான் அதிகம் .காரணம் அவர் எல்லா உறவுகளோடும் அவ்வாறு மனம் திறந்து பேசுவதில்லை . பேசும் பொருள் ஒன்றாக இருக்கவேண்டும் . எனக்கும் அவருக்கும் பிடித்த விடையம் தமிழ் தேசம் அதுதான் எங்களுக்கு இடையில் ஏற்பட்ட பாசம் . என் தாயின் வயது அவருக்கு . என் தாயிலும் பத்து மாதங்கள் மூத்தவர் .என் தாயின் பல் குணங்கள் அவரிடம் உண்டு . சிறந்த மகா மனுசி .... தனக்கு சின்னவயது முதல் போராட்டாங்களில் கலந்து கொள்ளவேண்டும் என்ற ஆசை இருந்தது அனால் அன்று தங்களை வெளியில் செல்ல வீட்டில் விடமாட்டார்கள் , இருந்தாலும் தான் எப்படியாவது இயன்றவரை அருகில் நடக்கும் உண்ணாவிரத போராட்டாம் கோயில்களில் நடக்கும் கூட்டங்கள் என்று எல்லாவற்றிற்கும் எப்படியாவது சென்று கலந்து கொள்வேன் . நிறைய பத்திரிகைகள் படிப்பது தனக்கு பிடிக்கும் . நாட்டின் நிலைமை பற்றி அறிந்து அதனை அயல் வீட்டாருடன் பேசுவது ஆர்வமுள்ளவர்களோடு பேசுவது அவருக்கு மிகவும் பிடிக்கும் . அக்காலத்தில் அடங்கா தமிழன் சுந்தரலிங்கம் . செல்வநாயகம் , ஜிஜி பொன்னம்பலம் . அமிர்தலிங்கம் போன்றவர்கள் கூடும் கூடங்களுக்கு எப்படியாவது சென்று வருவார் , அவர்கள் எல்லோரும் அன்று நிறைய பேசினார்கள் ஆனால் பிரபாகரன் போன்று செயல்படவில்லை என்பார் . இந்திய ஆமி வந்தபொழுது தானும் அவர்களை வரவேற்க சென்று தெள்ளிபலையில் பூ எல்லா தூவி வரவேற்று , தங்களுக்கு ஒரு நல்ல விடிவு வரபோகுது என்று நினைத்து இருந்தது எல்லாம் பின் அந்த ராஜீவ் காந்தி என்னும் அழிவான் எல்லாத்தையும் அப்படியே எமாற்றிட்டான் என்று அவரது பாணியில் திட்டுவதில் அவர்க்குள் இருக்கும் அரசியல் தெளிவு புலனாகும் .... தான் எப்பொழுதும் சோளம் குரக்கன் பயறு சக்கரை எல்லாம் வாங்கி திரிச்சு பொறி உருண்டை பிடித்து பேணிகளில் அடைத்து வைத்து இருந்து பொடியள் பிள்ளைகள் அதல போனால் கூப்பிட்டு தேநீரும் வைத்து கொடுத்து அதுகள பார்க்கும் பொழுது தனக்கு அழுகை அழுகையா வருமாம் .. இப்படி கஸ்டபடுதுகள் என்று . யார் பெத்த பிள்ளைகளோ என்று போராளிகளை கண்டதும் அவர்களுக்கு ஏதாவது உணவு செய்து கொடுத்து களைப்பாறி செல்லுங்கள் என்று சொல்லும் இந்த தாய்போல் ஏராளமான தாய் ஈழத்தில் இருகின்றார்கள் . பிள்ளைகள் இந்தபக்கம் வந்தா நான் இல்லை என்றாலும் வீட்டுக்குள் வந்து இருகிறதா எடுத்து சாப்பிட்டு போங்க .... என்று உரிமையுடன் சொல்லிவச்சு இருந்தேன் . சிலதுகள் வரும் எங்கபிள்ளை அந்த பிள்ளைய காணாம் என்று அடையாளம் சொல்லி கேட்டால் அவ வீரமரணம் அடைந்திட்டா அம்மா என்று சொல்லும் பொழுது கண்கள் கலங்கும் . தனக்கும் அதுகலபோல போகனும் என்றுதான் ஆசை அப்போ எனக்கு ஒரு ஆசை அதுகளுக்கு சமைச்சு போடும் பாக்கியம் கிடைக்காதா என்று ..வீட்டில் கணவருக்கு உடல் சுயீனம் அவரை பார்க்கவே எனக்கு நேரம் இருக்காது . மகரகம ஆஸ்பத்திரியில் இருந்து கொண்டுவந்து வீட்டில வச்சிதான் வைத்தியம் பார்த்திட்டு இருந்தோம் .அவருக்கு எழும்பி ஒன்றும் செய்ய முடியாது ,கான்சர் முத்திட்டு என்ன செய்யிறது . இந்தியன் ஆமி ஆழிவானுகள் போறானுகள் என்று ஒரு சந்தோசம் ..கொஞ்சம் அமைதி யான சூழல் வரபோகுது ஏன்று இருக்க மீண்டும் நாசமாப்போன சிங்களவனுக்கு கொதி வந்திட்டு ... மீண்டும் பலாலியில் இருந்து அடிக்கிறானுகள் செல் வந்து விழுகுது யாழ்பாணம் இடபெயர்வு நாங்க என்ன செய்யிறது .இவருக்கு எழும்ப முடியாத நிலை . அவர் சொல்றார் என்னை பற்றி ஜோசிக்கத நீ போ என்று ..அவரை தூக்கிக்கொண்டு வர என்னால முடியவில்லை .அயலில் ஒருத்தரும் இல்லை , மாவிட்டபுறம் தெல்லிப்பளை எல்லாம் ஆமி வந்திட்டான் ,சனம் எல்லாம் ஓடுதுகள் . அளவெட்டி காங்கேசன்துறை வீதி சந்தி அங்க தெரிந்த இரண்டு தம்பி சைக்கிளில் வந்தார்கள் அவரிடம் ஐயா அப்புவுக்கு முடியாது வீட்டில்தான் இருக்கிறார் சைக்கிளில் ஏத்திக்கொண்டு வாரியா ராசா என்று கேட்க ஓம் அம்மா என்று சொல்லிட்டு போனார்கள் ... கொஞ்ச நேரத்தில் திரும்பி வந்தார்கள் .அம்மா அங்க ஆமி வந்திட்டான் உள்ள போக முடியாது என்றார்கள் . ஐயோ என்ற ஐயா என்று மனம் கதறியது .... நோயாளிதானே அவரை ஒன்றும் செய்ய மாட்டானுகள் என்று மனம் சொல்லியது ... அதற்குபிறகு அவரை நான் பார்க்கவே இல்லை என்னநடந்தது என்று தெரியாது .அவரை அவனுகள் என்ன செய்தனுகள் என்று தெரியவில்லை என்று கண்கலங்க சொல்லும் பொழுது அவரின் மனதுள் உள்ள வேதனைகள் எவ்வளவு என்று உணரமுடியும் . தாய் மண்னிணில் இருந்து ஜெர்மனி கனடா சென்ற தனது பிள்ளைகளை காண புறப்படும் பொழுது இந்த மண்ணில் மீண்டும் எப்பொழுது வந்து சேர்வேனோ என்ற ஏக்கத்துடன் பிரிந்து வந்த அந்த தாய் . புலம்பெயர் மண்ணில் நடந்த போராட்டங்களில் கலந்து கொண்டு தனது வரலாற்றின் இன்னும் ஒரு பகுதியை தொடக்கி வைத்தார் . ஏறக்குறைய கடந்த பத்து ஆண்டுகளில் கனடா அமரிக்கா நாடுகளில் நடந்த போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார் . ஒருமுறை என்னுடன் அமெரிக்க வரபோவதாக சொன்னார். அவரை அழைத்து வந்தேன் என் வீட்டில் என்னுடன் தங்கி இருந்தார் , வாசிங்க்டன் வெள்ளைமாளிகை அழைத்து சென்றேன் ,,இங்கிருக்கும் அளிவானுகள் நினைத்தால்த்தால் எல்லாம் நடக்கும் என்று புலம்பினார் . நான் அவருடன் அடிக்கடி எங்கள் நாடுபற்றி பேசுவது வழக்கம் . ஒரு பட்டறிவு அனுபவம் ஒரு அரசியல் விமர்சகர் அவர் , செய்திதாள்கள் எதயும் ஒன்று விடாமல் படிப்பது அவரது வழக்கம் . அதிகமாக எல்லோருடனும் பேசவே மாட்டார் . தனக்கு பிடித்தவர்களுடன் அதிகமாக பேசுவார் .அதில் நானும் ஒருவனாக இருந்தேன் . கருணாநிதியின் வஞ்சகம் அவரை மிகவும் வெகுவாக பாதித்து இருந்தது . புலம்பெயர் நாடுகளில் சிலரின் மெத்தனபோக்கு சுய விளம்பரம் எல்லாமே இன்றும் தமக்கான பின்னடைவு என்று மனம் சலித்து இருந்தார் . இறுதியாக நான் அவரை சந்தித்த காலங்களில் அதிகமாக பேசுவதை குறைத்து விட்டார் , நோயின் உவாதை ஒரு புறம் அவரை வாட்ட தொடக்கி இருந்தது , அதை அவர் வெளியில் சொல்லவில்லை , எல்லாம் முடிந்து போனது என்ற பெரும் ஏக்கம் அவருக்குள் இருந்தது . இறுதி வரை அவர் ஈழம் மலரும் என்று ஒரு கனவுடன் இருந்தார் . இறுதி களத்தில் மீண்டும் மாவீரர் துயிலும் இல்லம் எல்லாம் சிலிர்த்து எழுந்தது என்ற மகிழ்வு அவருக்குள் இருந்தது , முள்ளிவாய்க்கால் முடிவுகள் மீண்டு முளை விடும் என்று அவருக்குள் ஒரு நம்பிக்கை எழுந்த காலத்தில் அவர் தனது வாழ்வை திரா நோயும் முதுமையும் கண்டு முடித்துகொண்டார் ...... அவரின் பிரிவு மனதுள் பெரும்துயரை விதைக்கின்றது.... மண்ணில் இதுபோல் மனிதர்கள் மீண்டும் மீண்டும் தோன்றவேண்டும்... எனது அமாவின் வாழ்க்கை வரலாற்ரை சுருக்கமாக எழுதியவர். பெரும் மதிற்புகுரிய திரு.மணிவன்னன் ஏஹாம்பரம் அவர்கள். மிகவும் நன்றிகள் அண்ணா. நன்றி.
27.01.2018. Dortmund. திரு.திருமதி.சந்திரசேகரம் சுதாயினி தம்பதிகளின் செல்வபுதல்வி Samya. அவர்களின் பிறந்தநாள் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்ரபோது எடுக்கபட்ட சிறிய பதிவு....... எமது டீஜே தமிழ் கரோக்கே இசை ஒலியியல் ஓளி கதம்பம். எங்களது இசைக்குடும்பம் சார்பாக செல்வி .சிந்துயா பாஸ்கரன். திரு.சந்திரசேகரம் அவர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களையும் அன்பாக தெரிவுத்துகொள்ளுகின்றேன். நன்றிகள். 28.01.2018.
27.01.2018. Dortmund. திரு.திருமதி.சந்திரசேகரம் சுதாயினி தம்பதிகளின் செல்வபுதல்வி Samya. அவர்களின் பிறந்தநாள் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்ரபோது எடுக்கபட்டசில நிழல்படங்கள்.. எமது டீஜே தமிழ் கரோக்கே இசை ஒலியியல் ஓளி கதம்பம். எங்களது இசைக்குடும்பம் சார்பாக செல்வி .சிந்துயா பாஸ்கரன். திரு.சந்திரசேகரம் அவர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களையும் அன்பாக தெரிவுத்துகொள்ளுகின்றேன். நன்றிகள். 28.01.2018.
14.01.2018. கள்ளம் காழ்ப்பு ஆகியவை படிந்த நமது உள்ளமான பழைய பானையை ஒதுக்கி, பரிசுத்த இதயம் என்னும் புதிய பானையை மாவிலை மஞ்சள்கொண்டு அலங்கரித்து, நல்ல எண்ணங்களென்ற புத்தரிசி இட்டு, வெள்ளை மனமென்ற வெல்லம் சேர்த்து, பாசம் என்ற கறந்த பாலை ஊற்றி வைத்து, மனித நேயம் என்ற பசுநெய் கலந்து, உலக வாழ்வென்ற அடுப்பில் ஏற்றி வைத்து, பொங்கலோ பொங்கலன்று கூவி சிரித்து.. சேர்ந்து மகிழ்ந்து குலவையிட்டு.. சூரியனுக்கு நன்றி சொல்லி படையல் இட்டு. உழவர் திருநாளை உறவுகளோடு இனிதே கொண்டாடுவோம்.. நம் பாரம்பரியம் காப்போம்.. தமிழராய் வாழ்வோம்.. இனிய உழவர் திருநாள் வாழ்த்துக்கள்.. ........
23.12.2017. வணக்கம் ஐரோப்பா. நெஞ்சம் மறக்குமா. எனது இனிய தொகுப்பில் இருந்து சிறிய பதிவு எனது அன்பான உறவுகளுடன். நன்றிகள்.